ராஜினாமா செய்வதை முறைப்படி அறிவித்தார் கோட்டாபய! முக்கிய தகவல்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது பதவியை ராஜினாமா செய்வதை முறைப்படி பிரதமர் ரணிலிடம் அறிவித்துள்ளார்.
அதன்படி பதவி விலகுவது உறுதி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம், உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளார். எதிர்வரும் 13ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவியிலிருந்து விலகாவிட்டால் அறிவித்தல் இன்றி வேலைநிறுத்தம் மற்றும் முழு கடையடைப்பில் ஈடுபட போவதாக தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்களின் ஒன்றியம் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து நேற்றைய தினம் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை பதவி விலகக் கோரி நேற்று முன் தினம் கொழும்பில் மாபெரும் போராட்டம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதன்போது ஜனாதிபதி மாளிகை மற்றும் ஜனாதிபதி செயலகம் என்பன ஆர்ப்பாட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்டிருந்தன.
இதனை தொடர்ந்து எதிர்வரும் 13ஆம் திகதி பதவியிலிருந்து விலகுவதாக ஜனாதிபதியினால் சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கோத்தபய ராஜபக்சே ராஜினாமா குறித்து இலங்கை பிரதமர் அலுவலகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதாவது கோட்டாபய ராஜபக்ச முன்பே அறிவித்தது போல் பதவியில் இருந்து விலகுகிறேன் என பிரதமர் ரணிலிடம் முறைப்படி தெரிவித்து உள்ளார்.