இலங்கையின் புதிய பிரதமரை இன்று அறிவிக்கிறார் அதிபர் கோட்டாபய! கசிந்த முக்கிய தகவல்
இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ச இன்று நாட்டின் புதிய பிரமரின் பெயரை அறிவிக்கவுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
பலநாட்கள் வன்முறைக்குப் பின்னர் இலங்கையை அதன் மோசமான பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்கும் முயற்சியாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச புதிய பிரதமரை வியாழன் அன்று நியமிக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மதிப்பிற்குரிய ஐந்து முறை முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, 225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் மற்ற கட்சிகள் ஆதரவுடன் ‘அனைத்து கட்சிகள் அடங்கிய அரசாங்கத்திற்கு’ தலைமை தாங்குவர்.
திங்களன்று பதவி விலகிய கோட்டாபய ராஜபக்சேவின் மூத்த சகோதரர் மகிந்த ராஜபக்சவுக்கு பதிலாக பிரதமராக பொறுப்பேற்பார் என அதிபருக்கு நெருங்கிய மூத்த அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும், கடைசி நிமிடத்தில் பிரச்சனைகள் எதுவும் இல்லாவிட்டால் இன்று பதவியேற்பு நடக்க வாய்ப்புள்ளது என்று ஜனாதிபதிக்கு நெருக்கமான ஒரு மூத்த அதிகாரி AFP இடம் கூறினார்.
ராஜபக்சே சகோதரர்களுக்கு இந்தியாவில் அடைக்கலம் அளிக்கக் கூடாது! சீமான் வலியுறுத்தல்