இலங்கையில் சூடுபிடிக்கும் ஜனாதிபதி தேர்தல்: அதிகரித்துள்ள புதிய வாக்காளர்கள்!
இலங்கையில் (Sri Lanka) ஜனாதிபதி தேர்தலுக்கான திகதியை தேர்தல் ஆணைக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இலங்கையில் சூடுபிடிக்கும் தேர்தல்
2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி (Sri Lanka Podujana Peramuna) வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ இலங்கையின் நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதனையடுத்து ஏற்பட்டு வந்த பொருளாதார பிரச்சினையால் பாதிப்புக்குள்ளான மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் செய்து 2022 ஆம் ஆண்டு ஜூலை 14 ஆம் திகதி கோட்டாபய ராஜபக்ஷவை (Gotabaya Rajapaksa) பதவியில் இருந்து விலக வைத்தனர்.
கோட்டாபய ராஜபக்ஷ பதிவியில் இருந்து விலகியதற்கு பிறகு புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றப்பட்டார்.
இந்நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் (Ranil Wickremesinghe) பதவிக்காலம் இந்த ஆண்டு முடிவடைகிறது.
எனவே இலங்கையில் தற்போது ஜனாதிபதி தேர்தல் (Presidential Elections) நடைபெறவுள்ளது. அதற்கான திகதியையும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதன்படி, 2024 ஆண்டிற்கான ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 17 முதல் ஒக்டோபர் 16 வரை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் 225 இடங்கள் உள்ளன. அதில் 196 பேர் தேர்தல் மூலமாகவும், 29 பேர் தேசியப் பட்டியல் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.
அதிகரித்துள்ள புதிய வாக்காளர்கள்
18 வயதை பூர்த்தி செய்த 10 இலட்சம் புதிய வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
இந்த தேர்தலில் சுமார் ஒரு கோடியே எழுபது இலட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருப்பதாக தேர்தல் ஆணைக்குழு (Election Commission) தெரிவித்துள்ளது.
மேலும் தேர்தல் நடத்துவதற்கான அடிப்படை நடிவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆயிரம் கோடி ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |