இலங்கை ஜனாதிபதியிடம் போராட்டக்காரர்கள் கிண்டலாக முன்வைத்த கேள்வி? வைரலான ஸ்கிரீன்ஷாட் புகைப்படம்
இலங்கை ஜனாபதி கோட்டாபய ராஜபக்சவிடம் அவரது வீட்டில் சின்ன பின் மொபைல் சார்ஜர் இல்லையா? என அவரது இணைய பக்கம் மூலமாக ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கையில் அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடியால் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவி விலக வேண்டும் என கோரிக்கை முன்வைத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
இவ்வாறு சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்களின் போராட்டம், ஜனாதிபதி கோட்டாபயவின் அதிகாரப்பூர்வ இல்லத்தை முழுவதுமாக கைப்பற்றும் அளவிற்கு பூதாகரமாக வெடித்தது.
அதன் தொடர்ச்சியாக போராட்டக்காரர்கள் ஜனாதிபதியின் இல்லத்தில் உள்ள படுக்கை அறை முதல் சமையலறை வரை நுழைந்து தங்களது எதிர்ப்பை தொடர்ந்து காட்டி வருகின்றனர்.
இந்தநிலையில், ஜனாதிபதி கோட்டாபய-வின் சமூக ஊடகத்தின் பக்கத்தில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வீட்டில் சின்ன பின் சார்ஜர் இல்லையா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கை ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்குள் புகுந்து, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சார்ஜர் இல்லையா? என கேள்வி எழுப்பு இருப்பது ஆர்ப்பாட்டக்காரர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் இதுத் தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி அனைத்து மக்களையும் வியப்படைய செய்து வருகிறது.