பிரித்தானியாவில் வன்முறை சம்பவங்கள்.. கவலையில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள்
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர்கள், டெஸ்ட் தொடருக்கு முன்னதாகவே அச்சம் அடைந்துள்ளனர்.
இலங்கை வீரர்கள் பாதுகாப்பு குறித்து கவலையடைந்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக புலம்பெயர்ந்தோருக்கு எதிராக பிரித்தானிய மக்கள் கொந்தளித்து வருகின்றனர். இதன் பின்னணியில் இலங்கை வீரர்கள் சற்று கவலையடைந்துள்ளனர்.
இந்த விவகாரத்தை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் (ECB) கவனத்திற்கு கொண்டு சென்றனர்.
இதையடுத்து, ECB-இல் நாங்கள் உங்களுக்கு முழுமையான பாதுகாப்பை வழங்குகிறோம். கவலைப்படத் தேவையில்லை என்று உறுதி அளித்தது.
ஒருநாள் தொடரில் இந்திய அணியை வீழ்த்திய இலங்கை, விரைவில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.
மூன்று டெஸ்ட் தொடருக்காக ஒன்பது பேர் கொண்ட இலங்கை அணி (ஏழு கிரிக்கெட் வீரர்கள் மற்றும் இரண்டு துணை ஊழியர்கள்) ஏற்கனவே இங்கிலாந்து வந்துள்ளது.
இருப்பினும், இலங்கை வீரர்கள் தங்கள் கவலையை வெளிப்படுத்தினர் மற்றும் அங்குள்ள பயங்கரமான சூழ்நிலைகள் காரணமாக ECB-யில் தஞ்சம் புகுந்தனர்.
'நாங்கள் தங்கியிருக்கும் இடத்திற்கு வெகு தொலைவில் கலவரங்கள் நடக்கின்றன. ஆனால், அனைத்து வீரர்களும் இன்னும் சற்று பதற்றத்தில் உள்ளனர். இந்த சூழ்நிலையில், நாங்கள் ஹோட்டலைத் தாண்டி வெளியே செல்ல முடியாத நிலையில் உள்ளோம்' என இலங்கை கிரிக்கெட் வீரர் ஒருவர் தெரிவித்தார்.
அதன் மூலம் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் உங்களின் பாதுகாப்பு எங்களுடையது என உறுதி அளித்தது. இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது போட்டி ஆகஸ்ட் 21ஆம் திகதி மான்செஸ்டரில் நடைபெறவுள்ளது.
அதன்பிறகு, ஆகஸ்ட் 29-ம் திகதி லார்ட்ஸ் மைதானத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டியும், செப்டம்பர் 6-ம் திகதி ஓவல் மைதானத்தில் மூன்றாவது டெஸ்ட் போட்டியும் நடைபெறும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Sri Lanka tour of England, Sri Lanka Cricket (SLC), Sri Lanka England test series, UK Riot