ரணில் கைது அரசியல் பழிவாங்கல் இல்லை! இலங்கையின் ஆளும் கட்சி தரப்பு விளக்கம்
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீதான கைது நடவடிக்கை அரசியல் பழிவாங்கல் இல்லை என்று ஆளும் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு வெல்லாவெளியில் இடம்பெற்ற போரதீவுப்பற்று பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டத்தில் இன்று(26.08.2025) கலந்துகொண்டு அவர் இந்த கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும் முன்னாள் ஜனாதிபதி ரணில் கைது செய்யப்பட்டதை அடுத்து நாட்டில் சட்டம் நிலைநிறுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதே சமயம், போரதீவுப்பற்று பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் குடிநீர் விநியோகம், போக்குவரத்து மேம்பாடு, யானை மனித மோதல் உட்பட பல்வேறு விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஞா.ஶ்ரீநேசன்,இரா.சாணக்கியன், வைத்தியர் இ.ஸ்ரீநாத், விமலநாதன் மதிமேனன் மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |