கனேடிய தமிழ் மக்களுக்கு இலங்கை சார்பில் வேண்டுகோள்
இலங்கையின் நல்லிணக்கம் மற்றும் பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகளில் கனேடிய தமிழ் சமூகம் பங்களிக்க வேண்டும் என கனடாவிற்கான இலங்கை தூதர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கை தூதரக அதிகாரி
ஸ்காபரோவில் உள்ள சந்திரமௌலீஸ்வர சிவன் ஆலயத்தின் வருடாந்த தேர் திருவிழாவில் ரொறன்ரோவிலுள்ள இலங்கை தூதரக அதிகாரி பங்கேற்ற நிலையில், தொடர்புடைய வேண்டுகோளை விடுத்துள்ளார்.
இந்த தேர்த்திருவிழாவில் கனடாவின் மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாநகரசபை உறுப்பினர்கள் என 1500க்கும் மேற்பட்ட பக்தர்கள் உட்பட திரளானோர் கலந்துகொண்டுள்ளனர்.
Credit: colombogazette
இந்த விழாவில் உரையாற்றிய இலங்கை தூதரக அதிகாரி, கனடாவில் உள்ள தமிழ்சமூகம் கனடாவின் பொருளாதாரம் மற்றும் கலாச்சாரத்தில் ஆற்றல்மிக்க சக்தியாக மாறியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
நல்லிணக்க பொருளாதார அபிவிருத்தி
மட்டுமின்றி, கனடாவின் வலுவான தமிழ் வர்த்தக சமூகமும், மிகச்சிறப்பான கல்வியை கொண்டுள்ள இளம்தமிழ் தொழில்துறையினரும் கனேடிய சமூகத்திற்குள் தமிழ் மக்களை ஒருங்கிணைக்கும் உந்துசக்தியாக உள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இலங்கையின் அனைத்து சமூகத்தினருக்கும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இலங்கை அரசாங்கம் முன்னெடுத்து வரும் நல்லிணக்க பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகளில் கனடா தமிழ் சமூகம் உரிய பங்களிப்பை வழங்கவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |