430 ஓட்டங்கள் எட்டி வரலாறு படைத்த இலங்கை! இதுவரை நடந்த சேஸிங் போட்டிகள்
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில், இலங்கை 430 ஓட்டங்கள் சேஸிங் செய்து வரலாறு படைத்தது.
பாகிஸ்தானில் நடந்து வரும் முத்தரப்பு ஒருநாள் போட்டியில், இங்கிலாந்து அணி நிர்ணயித்த 430 ஓட்டங்கள் இலக்கினை இலங்கை எட்டி சாதனை படைத்தது.
ஹாரி புரூக் 202 ஓட்டங்கள்
ராவல்பிண்டியில் நேற்று நடந்த முத்தரப்பு ஒருநாள் போட்டியில் இங்கிலந்து மற்றும் இலங்கை அணிகள் மோதின.
முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 429 ஓட்டங்கள் குவித்தது. ஹாரி புரூக் (Harry Brook) 116 பந்துகளில் 202 ஓட்டங்கள் விளாசினார்.
பின்னர் ஆடிய இலங்கை அணி 49.5 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 430 ஓட்டங்கள் எடுத்து மிரட்டல் வெற்றி பெற்றது.
பவன் ரத்னயாகே 130 (106) ஓட்டங்களும், தசுன் ஷானகா 97 (50) ஓட்டங்களும், அவிஷ்கா பெர்னாண்டோ 97 (83) ஓட்டங்களும் விளாசினார்.
ஒருநாள் கிரிக்கெட்டில் மிகப்பெரிய இலக்கினை சேஸ் செய்த இரண்டாவது அணி என்ற சாதனையை இலங்கை படைத்தது. இலங்கை அணி இதுவரை சேஸ் செய்ததில் மிகப்பெரிய இலக்கு இதுதான்.
ஒருநாள் கிரிக்கெட்டில் மிகப்பெரிய இலக்கினை எட்டிய அணிகள்
- தென் ஆப்பிரிக்கா - 435 ஓட்டங்கள் (அவுஸ்திரேலியாவிற்கு எதிராக, 2006)
- இலங்கை - 430 ஓட்டங்கள் (இங்கிலாந்திற்கு எதிராக, 2026)
- இந்தியா - 406 ஓட்டங்கள் (மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக, 2026)
- நெதர்லாந்து - 375 ஓட்டங்கள் (சூப்பர் ஓவரில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக, 2023)
- தென் ஆப்பிரிக்கா - 372 ஓட்டங்கள் (அவுஸ்திரேலியாவிற்கு எதிராக, 2016)
