அதிகரிக்கும் எரிபொருள் நெருக்கடி: இலங்கைக்கு டீசல் வழங்க இந்தியா பரிசீலனை
ஈரானுடான அமெரிக்கா-இஸ்ரேலின் போர் நடவடிக்கையால் உலகளாவிய அளவில் எரிசக்தி தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது.
ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எந்தவொரு வர்த்தக கப்பல்களும் செல்ல அனுமதிக்கப்படாத நிலையில் பல்வேறு உலக நாடுகளில் எரிசக்தி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இலங்கை, பங்களாதேஷ் மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகளிடம் இருந்து வந்து டீசல் விநியோகத்திற்கான கோரிக்கைகளை ஆராய்ந்து வருவதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், அண்டை நாடுகளுக்கு தேவையான சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் முக்கிய நாடாக இந்தியா இருந்து வருகிறது.

பங்களாதேஷ் இந்தியாவிடம் நேரடியாக டீசல் விநியோகத்திற்கான கோரிக்கையை முன்வைத்து இருப்பதாகவும், அது குறித்து தற்போது பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், கடந்த 2017 ம் ஆண்டு முதல் பங்களாதேஷ் நாட்டிற்கு இந்தியா டீசல் ஏற்றுமதி செய்து வந்தாலும், இந்தியாவின் சுத்திகரிப்பு திறன் மற்றும் உள்நாட்டு தேவைகளை கருத்தில் கொண்டு பங்களாதேஷின் கோரிக்கை குறித்து பின்னர் முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
அதைப்போல இலங்கை மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகளிடம் இருந்தும் எரிசக்தி தேவை தொடர்பான கோரிக்கைகள் வந்து இருப்பதாகவும், அது தொடர்பாக மதிப்பாய்வு செய்யப்பட்டு வருவதாகவும் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL ல் இணையுங்கள். |