இலங்கையின் மிகவும் பிரசித்தி பெற்ற சிவப்பு பள்ளி! ஒளிந்திருக்கும் ரகசியங்கள் ஏரளாம்
கொழும்பு நகரத்தின் சுற்றுலாத்தளங்களில் ஒன்றாகவும்,கொழும்பில் உள்ள பழமையான பள்ளிவாசல்களில் ஒன்றாக விளங்குகின்றது சிவப்பு பள்ளி ( Red Mosque).
19 ஆம் நூற்றாண்டில் தென்னிந்திய வர்த்தகர்களின் வழிபாட்டுத் தலமாக கட்டப்பட்ட இந்த மசூதி இன்றுவரை அனைத்து முஸ்லிம்களும் வழிபடும் புனித இடமாக உள்ளது.
ஜாமியுல் அல்பர் ஜும்மா மஸ்ஜித் என அழைக்கப்படும் இந்த வரலாற்று வழிபாட்டுத் தலமானது ,தமிழில் சம்மன் கொட்டு பள்ளி என்றும் சிங்களத்தில் “RATHU PALLIYA” என்றும் ஆங்கிலத்தில் “RED MASJID” என்றும் அழைக்கப்படுகின்றது.
இந்த பள்ளிவாசலில் பல சிறப்பம்சங்கள் அடங்கியுள்ளது. தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.