நேரலை: இலங்கையின் புதிய அமைச்சரவை இன்று பதவியேற்பு
புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சர்கள் இன்று (நவம்பர் 18) முற்பகல் 10.00 மணிக்கு கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டுள்ளனர்.
இந்த வைபவத்தின் போது அமைச்சரவை மற்றும் பிரதி அமைச்சர்கள் இருவரும் பதவிப் பிரமாணம் செய்து கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் (NPP) சிரேஷ்ட பேச்சாளர் டில்வின் சில்வா, அமைச்சரவை 25 அல்லது அதற்கும் குறைவாக இருக்கும் என்றும், அமைச்சுகளுக்கான பாடங்களை ஒதுக்குவதில் விஞ்ஞான ரீதியிலான முறை இருக்கும் என்றும் முன்னர் தெரிவித்திருந்தார்.
பிரதமர் பதவியில் மாற்றம் இல்லை என்றும் NPP முடிவு செய்துள்ளது. இதன்படி, புதிய அரசாங்கத்தின் பிரதமராக ஹரிணி அமரசூரிய நீடிக்க உள்ளார்.
இதேவேளை, கம்பஹாவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ஜயசிங்க, தானும் தமது பாராளுமன்ற உறுப்பினர் குழுவும் மக்களின் தேவைகளுக்கு இணங்கி முன்னோக்கி செல்வதற்கு அர்ப்பணிப்புடன் இருப்பதாக தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமை (நவ. 15) நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் NPP அமோக வெற்றி பெற்று, மொத்தம் 159 இடங்களைக் கைப்பற்றி சாதனை படைத்தது.
இன்று காலை 10.00 மணிக்கு புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |