2022 பொருளாதார நெருக்கடி: கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தத்தை உறுதிப்படுத்திய இலங்கை
இலங்கையின் வெற்றிகரமான கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தத்தின் மூலம் தங்கள் நாட்டின் பொருளாதார மீட்சியில் மிகப்பெரிய அடியை எடுத்து வைத்துள்ளது.
பொருளாதார மீட்சி ஒப்பந்தம்
இலங்கை தனது பொருளாதார மீட்சிக்கான ஒரு முக்கிய படியை எடுத்துள்ளது. சுமார் $10 பில்லியன் டொலர் மதிப்பிலான கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தத்தை முக்கிய கடன் வழங்குனர்களுடன் இறுதி செய்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தில் பல நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கமிட்டி (அதிகாரப்பூர்வ கடன வழங்குநர் குழு) மற்றும் சீனாவின் எக்ஸிம் வங்கியும் (China Exim Bank) இடம் பெற்றுள்ளன.
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) தேசிய உரையில் வெற்றிகரமான பேச்சுவார்த்தைகளை அறிவித்தார்.
ஜப்பான் நிதியளித்த விமான நிலைய விரிவாக்கம் மற்றும் தலைநகரில் புதிய மின்சார ரயில் அமைப்பு உள்ளிட்ட தடைப்பட்ட உள்கட்டமைப்பு திட்டங்களை மீண்டும் தொடங்கும் ஒப்பந்தத்தின் திறனை அவர் உரையில் சுட்டிக்காட்டினார்.
இந்த ஒப்பந்தம் குறித்த கூடுதல் விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
2022 ஆம் ஆண்டில் வெளிநாட்டு நாணய கையிருப்பு குறைபாட்டால் ஏற்பட்ட இலங்கையின் கடுமையான பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து இந்த ஒப்பந்தம் ஒரு திருப்புமுனையை குறிக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |