இலங்கை - தென்னாப்பிரிக்க அணிகள் இடையிலான இறுதி டி20 போட்டி! ரசிகர்களின் எதிர்பார்ப்பு இதுதான்
இலங்கை - தென்னாப்பிரிக்கா இடையிலான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறவுள்ளது.
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுபயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரை இலங்கை அணி 2 - 1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
அதன்பின்னர் இலங்கை - தென்னாப்பிரிக்கா இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஆரம்பமானது. இதில் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று தென்னாப்பிரிக்கா தொடரை கைப்பற்றிவிட்டது.
Final match of the #SLvSA series!
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) September 14, 2021
? RPICS
? 7:00pm
? Siyatha TV, Dialog (pay), Peo (IPTV)
? SLBC (94.3 fm/ 94.5 fm)
? SLC YouTube
What changes would you make to ?? playing XI for the 3rd T20I? ? pic.twitter.com/fEebPzSeBX
இரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான போட்டி இன்று மாலை 7 மணிக்கு கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
தொடரில் தோல்வியடைந்தாலும், இப்போட்டியில் இலங்கை ஆறுதல் வெற்றியை பெற வேண்டும் என்பதே ரசிகர்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதோடு இலங்கை அணி இன்றைய போட்டியில் வென்றால் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள உலகக்கோப்பை தொடரை எதிர்கொள்ள இலங்கை வீரர்களுக்கு அது ஊக்கத்தை கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.