இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் பதவி நீக்கம்.., உலகக்கோப்பை கிரிக்கெட் காரணமா?
இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் ரோஷன் ரணசிங்கவை பதவி நீக்கம் செய்து அந்நாட்டு அதிபர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.
உலககோப்பை கிரிக்கெட் தோல்வி
சமீபத்தில் இந்தியாவில் நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி படுதோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் 9 -வது இடத்தை பிடித்து, லீக் சுற்றுடன் வெளியேறியது.
இதனால் இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகிகளை பதவி நீக்கம் செய்தும், 7 பேர் கொண்ட குழுவை அமைத்தும் விளையாட்டுத்துறை அமைச்சர் ரோஷன் ரணசிங்க உத்தரவிட்டார்.
இதனைத்தொடர்ந்து, இலங்கை கிரிக்கெட் வாரியத்துக்குள் அரசியல் தலையீடு காணப்படுவதாக கூறி இலங்கை கிரிக்கெட் அணியை தடை செய்ய சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கடந்த நவம்பர் 10 -ம் திகதி நடவடிக்கை எடுத்திருந்தது.
பதவி நீக்கம்
இந்நிலையில் இன்று (நவ.27) இலங்கையில் அமைச்சரவைக் கூட்டம் கூடியது. அப்போது கூட்டத்தில் பேசிய ரோஷன் ரணசிங்க, "கிரிக்கெட்டை சரிசெய்யும் முயற்சியின் போது நான் கொல்லப்படலாம்.
அவ்வாறு கொல்லப்பட்டால் எனது இறப்பிற்கு அதிபரும், அதிபரின் ஆலோசகருமே காரணம்" எனக் கூறியிருந்தார்.
இதனைத்தொடர்ந்து அமைச்சரவை முடிந்து சில நிமிடங்களில் ரோஷன் ரணசிங்கவை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கம் செய்து அதிபர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |