புதிதாக பரவும் கண் நோய்; சுகாதார அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
இலங்கையில் பல பகுதிகளில் ‘கான்ஜுன்க்டிவிடிஸ்’ எனப்படும் கண் தொற்று வேகமாக பரவி வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பரவி வரும் புதிய நோய்
இலங்கையில் பல பகுதியில் கண் தொற்று நோய் பரவி வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இது பொதுவான ஒரு கண் நோயாகும்.
பாதிக்கப்பட்ட நபரின் கண்ணீர் மற்றும் தொடர்புடைய சுரப்புகளால் இந்த நோய் பெரும்பாலும் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவுகிறது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இந்த நோய் ஏற்பட்டு விட்டால் ஒரு சில அறிகுறிகள் உடல் ரீதியாக ஏற்படும். இரண்டு கண்களிலும் சிவத்தல், கண்களில் அரிப்பு, அதிகரித்த கண்ணீர் உற்பத்தி, தலைவலி, ஒளியின் உணர்திறன் மற்றும் வறண்ட கண்கள் போன்ற அறிகுறிகள் காணப்படும்.
இதனால், நோய்த் தொற்று அபாயத்தைக் குறைக்கும் வகையில், தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
என்ன செய்ய வேண்டும்?
பொது போக்குவரத்தை பயன்படுத்தும் போது கைகளை தண்ணீரால் அடிக்கடி கழுவுதல், கை சுத்திகரிப்புகளை பயன்படுத்துதல் போன்ற தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவதன் மூலம் நோய் பரவுவதை குறைக்க முடியும் என தெரிவித்துள்ளார்கள்.
இந்த விடயத்தில் தேவையற்ற அச்சம் வேண்டாம் என்று பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கண் தொற்று ஆரோக்கியத்திற்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாது மற்றும் 3 முதல் 4 நாட்களுக்குள் சரியாக வாய்ப்புள்ளது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |