வணிந்து ஹசரங்க தலைமையில் களமிறங்கும் இலங்கை அணி
வங்கதேச டி20 தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை, வங்கதேச அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் வருகின்ற மார்ச் 4-ம் திகதி தொடங்கவுள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 3 ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் கொண்ட நீண்ட தொடரின் விளையாடுகிறது.
இந்நிலையில், டி20 தொடருக்கான 17 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அணிக்கு வணிந்து ஹசரங்க அணித்தலைவராகவும், சரித் அசலங்க துணைத்தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை கிரிக்கெட்டின் மூத்த வீரரான ஏஞ்சலோ மேத்யூஸ், குசால் பெரேரா உள்ளிட்ட வீரர்களும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
அணி விவரம்:
The squad for the upcoming #SLvBAN T20I series has been announced! ? pic.twitter.com/bNPOTeKgPM
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) February 28, 2024
- வணிந்து ஹசரங்க
- சரித் அசலங்கா
- அவிஷ்க ஃபெர்னாண்டோ
- குசல் மெண்டிஸ்
- குசல் பெரேரா
- ஏஞ்சலோ மேத்யூஸ்
- தசுன் ஷனக
- தனஞ்சய டி சில்வா
- சதீர சமரவிக்ரம
- கமிந்து மெண்டிஸ்
- மஹீஷ் தீக்ஷன
- அகில தனஞ்சய
- நுவான் துஷார
- மதீஷா பத்திரனா
- பினுர ஃபெர்னாண்டோ
- ஜெப்ரி வான்டர்சே
- தில்ஷன் மதுஷன்ங்கா
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |