இலங்கை அமைச்சர் சனத் நிஷாந்த சாலை விபத்தில் உயிரிழப்பு
இலங்கை அமைச்சர் சனத் நிஷாந்த சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
இலங்கை அமைச்சர் உயிரிழப்பு
இலங்கையின் கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை நிகழ்ந்த வாகன விபத்தில் இலங்கை இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
அமைச்சர் பயணம் செய்த வாகனம் கட்டுநாயக்க நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளான நிலையில், முதலில் அமைச்சர் சனத் நிஷாந்த உட்பட 3 பேர் காயங்களுடன் ராகம மருத்துவமனைக்கு அவசர சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்நிலையில் இலங்கை இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த சிகிச்சை பலனின்றி உயிரிழந்து இருப்பதாக ராகம மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

வெறும் 80 ரூபாயிலிருந்து 1600 கோடி ரூபாய் நிறுவனம்: அப்பளம் விற்று சாதித்து காட்டிய அந்த பெண்கள் யார்?
மேலும் அமைச்சருடன் விபத்தில் சிக்கிய அவரது தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி கான்ஸ்டபிள் ஜெயக்கொடியும் உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |