பாலியல் வன்கொடுமை புகாரில் சிக்கிய இலங்கை வீரர்: கிரிக்கெட் வாரியம் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை
பாலியல் வழக்கில் சிக்கிய இலங்கை வீரர் தனுஷ்கா குணதிலகா.
அனைத்து கிரிக்கெட் முறைகளில் இருந்தும் இடைநீக்கம்.
பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்கா குணதிலகா அனைத்து கிரிக்கெட் முறைகளில் இருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
டி20 உலக கோப்பை போட்டிக்காக அவுஸ்திரேலிய சென்ற இலங்கையில் கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் தனுஷ்கா குணதிலகாவும் இடம்பெற்று இருந்தார்.
இந்த தொடரின் இடையே ஏற்பட்ட காயம் காரணமாக டி20 உலக கோப்பை போட்டிகளில் இருந்து விலகினார், இருப்பினும் அணிக்கு உற்சாகம் அளிக்கவும், வீரர்களுக்கு உதவி செய்யவும் அணியுடன் தொடர்ந்து பயணித்து வந்தார்.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு, டி 20 உலக கோப்பை போட்டிக்காக அவுஸ்திரேலியா சென்ற இலங்கை வீரர் தனுஷ்கா குணதிலகா பாலியல் வன்கொடுமை புகாரில் சிட்னி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக சிட்னி பொலிஸார் தெரிவித்த தகவலில், இலங்கை வீரர் தனுஷ்கா குணதிலகா டேட்டிங் ஆப் மூலம் 29 வயது பெண்ணுடன் பழகி வந்தாகவும், அவர் மீது பாலியல் வன்கொடுமை புகார் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: கழிவறையை விட மொபைல் போன்கள் ஆபத்தானது!
இந்தநிலையில், பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்கா குணதிலகா அனைத்து கிரிக்கெட் முறைகளில் இருந்தும் இடைநீக்கம் செய்யப்படுவதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இலங்கை அணி டி20 உலக கோப்பை தொடரின் லீக் போட்டிகளில் முதல் இரண்டு இடங்களை பிடிக்க தவறியதை அடுத்து தொடரில் இருந்து வெளியேறி மீண்டும் இலங்கை திரும்பியது, ஆனால் இலங்கை அணியுடன் இலங்கை வீரர் தனுஷ்கா குணதிலகா செல்ல முடியாமல் அவுஸ்திரேலியாவில் உள்ளார்.