இலங்கையில் மாணவிகளிடம் தகாத முறை செயல்பாடு: ஆசிரியர் கைது
இலங்கையில் பாடசாலை ஒன்றில் 3 மாணவிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக சந்தேகிக்கப்படும் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆசிரியர் கைது
இலங்கையின் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மூன்று மாணவிகளை தகாத செயற்பாட்டிற்கு உட்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் ஆசிரியரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பாடசாலையின் ஆய்வு கூடத்தில் 3 மாணவிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக சந்தேகத்தின் பேரிலே அதே பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸார் விசாரணை
இதில் கிதுல்லே பல்லேதோவ பகுதியில் வசிக்கும் 29 வயதுடைய திருமணமான ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பந்தப்பட்ட ஆசிரியர் மாணவி ஒருவருடன் காதல் உறவில் ஈடுபட்டு வந்ததும் அதன் வாயிலாக ஏனைய மாணவிகளையும் தகாத செயற்பாட்டிற்கு உள்ளாகியுள்ளதாக ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான விரிவான விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |