உலகக் கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு! ஷனகா தலைமையில் களமிறங்கும் படை
ஆசியக் கோப்பையை வென்ற ஷனகா தலைமையிலான அணி உலகக் கோப்பையில் களமிறங்க உள்ளது
உலகக் கோப்பைக்கான இலங்கை அணியில் மீண்டும் களமிறங்கும் லஹிரு குமார
டி20 உலகக் கோப்பைக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் மாதம் ஆடவருக்கான டி20 உலகக் கோப்பை தொடங்குகிறது.
இந்த தொடருக்காக ஒவ்வொரு அணியும் தொடரில் களமிறங்கும் தங்கள் வீரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகின்றன. இலங்கை அணி தற்போது மொத்தம் 20 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்த தொடரில் தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணி களமிறங்க உள்ளது. அதிரடி வீரரான பனுக ராஜபக்ச இதில் இடம்பிடித்துள்ளார்.
AP Photo
துடுப்பாட்ட வீரர்களான குணதிலகா, நிசங்கா, குசால் மெண்டீஸ், அசலங்கா ஆகியோரும், ஆல்ரவுண்டர்களான ஹசரங்கா, தனஞ்சய டி சில்வா, கருணரத்னே ஆகியோரும் விளையாட உள்ளனர்.
பந்துவீச்சுக்கு தீக்ஷனா, வண்டெர்செ, சமீரா, லஹிரு குமாரா, இளம் வீரரான மதுஷன்கா ஆகியோரும் உள்ளனர். காத்திருப்பு வீரர்கள் பட்டியலில் அஷென் பண்டார, பிரவீன் ஜெயவிக்ரெமா, தினேஷ் சண்டிமல், பினுரா பெர்னாண்டோ மற்றும் நுவானிடு பெர்னாண்டோ உள்ளனர்.
PC: Alex Davidson/Getty Images
அணி விபரம்: தசுன் ஷனகா (கேப்டன்), குணதிலகா, நிசங்கா, குசால் மெண்டீஸ், அசலங்கா, பனுக ராஜபக்ச, ஹசரங்கா, தனஞ்சய டி சில்வா, கருணரத்னே, தீக்ஷனா, வண்டெர்செ, சமீரா, லஹிரு குமாரா, மதுஷன்கா, பிரமோத் மதுஷன்