தோல்வியை நோக்கி இலங்கை! லஹீரு திரிமன்னே அசத்தல் சதம்: இங்கிலாந்தை சுருட்டுமா?
இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது.
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி கல்லி சர்வேதச மைதானத்தில், கடந்த 14-ஆம் திகதி முதல் நடைபெற்று வருகிறது.
இதில் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 135 ஓட்டங்களுக்குள் ஆல் அவுட் ஆக, அடுத்து ஆடிய இங்கிலாந்து அணி ஜோ ரூட்டின் இரட்டை சத்ததால் 421 ஓட்டங்கள் குவித்தது.
அதன் பின் 286 ஓட்டங்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய இலங்கை அணிக்கு துவக்க வீரர்களான குசால்ப் பெரேரா மற்றும் லஹீரு திரிமன்னே சிறப்பான துவக்கம் கொடுத்தனர்.
இந்த ஜோடி முதல் விக்கெட்டிற்கு 101 ஓட்டங்கள் குவித்த நிலையில், குசல் பெரேரா 62 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
அதன் பின் வந்த குசால் மெண்டிஸ் 15 ஓட்டங்களிலும், லசித் எம்புல்டினியா டக் அவுட் ஆகி வெளியேற, ஆஞ்சிலோ மேத்யூசுடன் சேர்ந்து லஹீரு திரிமன்னே அசத்தல் ஆட்டத்தை கொடுத்தார்.
இதனால் லஹீரு திரிமன்னே 111 ஓட்டங்களிலும், மேத்யூஸ் 71 ஓட்டங்களிலும் வெளியேற இறுதியாக இலங்கை அணி 359 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதனால் இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 73 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்னும் முழுமையாக ஒருநாள் இருப்பதால், இந்த ஓட்டத்தை இங்கிலாந்து அணி அசால்ட்டாக எட்டிவிடும் என்பதால், இப்போட்டியில் இலங்கை அணி ஜெயிப்பது மிகவும் கஷ்டம்.