தோல்வியால் தகுதியை இழந்த இலங்கை அணி! 44 ஆண்டுகளில் முதல் முறை..ரசிகர்கள் அதிர்ச்சி
நியூசிலாந்துக்கு எதிராக ஒருநாள் தொடரை கைப்பற்ற தவறியதால், இலங்கை அணி நேரடியாக உலகக்கோப்பைக்கு நுழையும் தகுதியை இழந்தது.
புள்ளிப்பட்டியலில் சரிவு
இலங்கை அணி ஒருநாள் தொடரை 0-2 என்ற கணக்கில் நியூஸிலாந்திடம் பறிகொடுத்தது. இதனால் புள்ளிப்பட்டியலில் இலங்கை அணி சரிந்துள்ளது.
முதல் போட்டியில் 198 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து, மூன்றாவது போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது. இரண்டாவது போட்டி கைவிடப்பட்டது.
இலங்கை அணி தொடர் தோல்விகளால், இந்த ஆண்டு நடைபெற உள்ள ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் நேரடியாக பங்குபெறும் தகுதியை இழந்துவிட்டது.
@AFP Photo
44 ஆண்டுகளில் முதல் முறை
கடந்த 44 ஆண்டுகளில் இலங்கை அணி நேரடி தகுதியை இழப்பது இதுவே முதல் முறையாகும். இதன் காரணமாக சூன் மாதம் தகுதிச்சுற்று போட்டிகளில் இலங்கை அணி விளையாட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
நெதர்லாந்து, ஜிம்பாப்வே, நேபாளம், ஓமன் மற்றும் ஸ்கொட்லாந்து ஆகிய அணிகளுடன் இலங்கை அணி இணைந்துள்ளது. இந்தியாவில் அக்டோபர் மாதம் 5ஆம் திகதி உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது.
@Getty