காலே டெஸ்டில் களமிறங்கும் இலங்கைப்படை அறிவிப்பு!
காலே டெஸ்டில் விளையாட உள்ள இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
டெஸ்ட் தொடர்
இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அயர்லாந்து அணி விளையாடுகிறது.
இருநாடுகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி காலேவில் 16ஆம் திகதி தொடங்குகிறது. இதற்காக அயர்லாந்து அணி வீரர்கள் இலங்கை வந்தடைந்துள்ளனர்.
@AFP/Getty Images
இலங்கை அணி அறிவிப்பு
இந்த நிலையில் முதல் டெஸ்டில் விளையாடும் திமுத் கருணரத்னே தலைமையிலான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அனுபவ வீரரான ஏஞ்சலோ மேத்யூஸ், குசால் மெண்டிஸ், தினேஷ் சண்டிமல் ஆகிய துடுப்பாட்ட வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
அதேபோல் ஆல் ரவுண்டர்களான தனஞ்செய டி சில்வா, பிரபத் ஜெயசூர்யாவும், விக்கெட் கீப்பர்களாக நிஷன் மதுஷ்கா மற்றும் சடீரா சமரவிக்ரமா ஆகிய இருவரும் உள்ளனர்.
@icc-cricket.com
இலங்கை - அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி 24ஆம் திகதி காலேவில் நடக்க உள்ளது.
இலங்கை அணி விபரம்:
- திமுத் கருணரத்னே (கேப்டன்)
- குசால் மெண்டிஸ்
- ஏஞ்சலோ மேத்யூஸ்
- தினேஷ் சண்டிமல்
- தனஞ்செய டி சில்வா
- கமிந்து மெண்டிஸ்
- நிஷன் மதுஷ்கா
- சடீரா சமரவிக்ரமா
- ரமேஷ் மெண்டிஸ்
- பிரபத் ஜெயசூர்யா
- துஷன் ஹேமந்தா
- லசித் எம்புல்டேனியா
- அசிதா பெர்னாண்டோ
- விஷ்வா பெர்னாண்டோ
-
மிலன் ரத்னாயகே