நியூசிலாந்து தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு! 17 வீரர்களுடன் களமிறங்கும் படை
நியூசிலாந்து எதிரான தொடரில் பங்கேற்கும் 17 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து தொடர்
இலங்கை கிரிக்கெட் அணி அடுத்த மாதம் நியூஸிலாந்திற்கு பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது. பயிற்சி ஆட்டம், இரண்டு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 என நீண்ட தொடரில் இரு அணிகளும் விளையாடுகின்றன.
மார்ச் நான்காம் திகதி டெஸ்ட் தொடருக்கான இரண்டு நாள் கொண்ட பயிற்சி ஆட்டம் நடக்க உள்ளது.
இலங்கை டெஸ்ட் அணி
இந்த நிலையில், டெஸ்ட் தொடருக்கான 17 வீரர்கள் கொண்ட இலங்கை அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. திமுத் கருணரத்னே தலைமையிலான அணியில் மூத்த வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ், குசால் மெண்டிஸ் உள்ளிட்ட வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
17-member Sri Lanka Test squad announced for New Zealand Tour 2023. #NZvSL pic.twitter.com/yC8QSCGSJq
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) February 24, 2023
அணி விபரம்:
- திமுத் கருணரத்னே (கேப்டன்)
- ஒஷட பெர்னாண்டோ
- குசால் மெண்டிஸ்
- ஏஞ்சலோ மேத்யூஸ்
- தனஞ்சய டி சில்வா
- தினேஷ் சண்டிமல்
- கமிந்து மெண்டிஸ்
- நிரோஷன் திக்வெல்ல
- நிஷன் மதுஷ்கா
- ரமேஷ் மெண்டிஸ்
- பிரபத் ஜெயசூர்யா
- சமிக கருணரத்னே
- கசுன் ரஜிதா
- லஹிரு குமார
- அசிதா பெர்னாண்டோ
- விஷ்வா பெர்னாண்டோ
- மிலன் ரத்னாயகே