இலங்கையில் சரியான பராமரிப்பு இல்லை! தன் நாட்டுக்கே செல்ல விமான நிலையம் வந்த யானை
தாய்லாந்து அரசாங்கத்தினால் 22 வருடங்களுக்கு முன்னர் இலங்கைக்கு வழங்கப்பட்ட முத்துராஜா யானையை மீண்டும் தாய்லாந்திற்கு கொண்டு செல்லும் ஏற்பாடானது தற்போது நடைபெற்று வருகின்றது.
தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் இருந்து காலை 3மணியளவில் கட்டுநாயக்க விமானநிலையத்திற்கு முத்துராஜா யானை தகுந்த பாதுகாப்புடன் வாகனத்தில் கொண்டுவரப்பட்டது.
நாடு திரும்பும் யானை,
russian illusion -76 என்ற விமானத்தில் பாதுகாப்பான கூட்டில் வைத்து யானை செல்ல தயாராகியுள்ளது.
இன்று காலை 7மணியளவில் இந்த விமானம் புறப்பட்டுள்ளது.
யானையின் உடல்நிலை மோசமாகி வருதால் இந்த யானையை தாய்லாந்து அரசாங்கம் மீண்டும் தன் நாட்டிற்கே கொண்டு செல்வதாக இலங்கை அரசிடன் கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும் வளர்ப்பு உயிரினங்களை பாதுகாக்கும் சக்தி இலங்கையிடம் குறைந்து காணப்படுகின்றது என்று இந்த சம்பவத்தினூடாக தெரிகின்றது என அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |