இந்தியாவுடன் மோதும் இலங்கை டெஸ்ட் அணி அறிவிப்பு!
இந்தியாவுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
டி20 தொடரை தொடர்ந்து இரு அணிகளும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கின்றன.
இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு 18 பேர் கொண்ட அணியை இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு தெரிவு செய்துள்ளது.
டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி;
- திமுத் கருணாரத்ன – கேப்டன்
- பாத்தும் நிசங்கா
- லஹிரு திரிமான்ன
- தனஞ்சய டி சில்வா - துணை கேப்டன்
- குசல் மெண்டிஸ் - (உடற்தகுதிக்கு உட்பட்டது)
- ஏஞ்சலோ மேத்யூஸ்
- தினேஷ் சண்டிமால்
- சரித் அசலங்க
- நிரோஷன் திக்வெல்ல
- சாமிக்க கருணாரத்ன
- ரமேஷ் மெண்டிஸ் (காயம் காரணமாக பங்கேற்கவில்லை)
- லஹிரு குமார
- சுரங்கா லக்மால்
- துஷ்மந்த சமீர
- விஷ்வா பெர்னாண்டோ
- ஜெஃப்ரி வாண்டர்சே
- பிரவீன் ஜெயவிக்ரம
- லசித் எம்புல்தெனியா
இதற்கிடையில், காயமடைந்த குசல் மெண்டிஸ் மற்றும் மஹீஷ் தீக்ஷனா ஆகியோருக்கு பதிலாக நிரோஷன் திக்வெல்ல மற்றும் தனஞ்சய டி சில்வா ஆகியோர் டி20 அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
Sri Lanka Cricket’s Selection Committee selected 18 member squad to play the upcoming 02 match Test series vs India. ?https://t.co/2EbxeBfA6C #INDvSL
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) February 25, 2022
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5வது டி20 போட்டியின் போது குசல் மெண்டிஸ் மற்றும் தீக்ஷனா இருவருக்கும் தொடை தசையில் காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
தீக்ஷனா நாடு திரும்புவார், அதே நேரத்தில் வனிந்து ஹசரங்கவும் அவுஸ்திரேலியாவில் இருந்து நாடு திரும்புவார் என இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.
இலங்கை அணிக்காக சுரங்கா லக்மால் விளையாடுவது இதுவே கடைசி என்பது குறிப்பிடத்தக்கது.