இலங்கையின் சுற்றுலா துறை வருவாய் 61 சதவீதம் உயர்வு
இலங்கையின் சுற்றுலா துறை மூலம் செப்டம்பர் மாதத்தில் வெளிநாட்டு நாணய வருவாய் 181 மில்லியன் அமெரிக்க டொலர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது கடந்த ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் பெற்ற 152 மில்லியன் டொலர் வருவாயுடன் ஒப்பிடுகையில் கணிசமான உயர்வை வெளிப்படுத்துகிறது.
இலங்கை மத்திய வங்கியின் (CBSL) தரவுகளின் படி, இந்த வருவாய் இவ்வாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் மொத்தமாக 2.35 பில்லியன் தோழராக உயர்ந்துள்ளது.
இது கடந்த ஆண்டின் அதே கால கட்டத்தில் பெறப்பட்ட 1.46 பில்லியன் டொலருடன் ஒப்பிடுகையில் 61.2% அதிகரிப்பை குறிக்கிறது.
இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தின் வாராந்திர அறிக்கையின் படி, இந்த செப்டம்பர் மாதத்தில் 122,140 சுற்றுலாவாசிகளின் வருகைகள் பதிவாகியுள்ளன.
இது கடந்த ஆண்டின் செப்டம்பர் மாதம் 111,938 வருகைகளுடன் ஒப்பிடுகையில் 9.11% அதிகரிப்பைக் காட்டுகிறது.
2024-ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் மொத்தம் 1.48 மில்லியன் சுற்றுலாவாசிகளின் வருகைகள் பதிவாகியுள்ள நிலையில், இலங்கை இந்த ஆண்டிற்கான மொத்த சுற்றுலாவாசிகளின் வருகையை 2.3 மில்லியன் என எதிர்பார்க்கிறது.
இந்தியா செப்டம்பர் மாதத்தின் முன்னணி சுற்றுலா வருகையாளர்களாக இருந்தது.
இந்தியாவிலிருந்து 27,884 பேர் வருகை இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அதனைத் தொடர்ந்து, சீனாவிலிருந்து 9,078 சுற்றுலாவாசிகள் வருகை தந்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Sri Lanka Tourism, Sri Lanka Tourism Income