லசித்.. மெண்டிஸ் அபாரம்! வெஸ்ட் இண்டீஸை ஒயிட் வாஷ் செய்து தொடரை கைப்பற்றியது இலங்கை!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக நடைபெற்ற 2ஆவது டெஸ்ட் போட்டியை வென்றதன் மூலம் 2 போட்டிகளை கொண்ட தொடரை ஒயிட் வாஷ் செய்தது இந்திய கிரிக்கெட் அணி.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதியது.
காலே மைதானத்தில் நடத்த முதல் டெஸ்ட் போட்டியில், 187 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி இலங்கை அணி அபார வெற்றிப்பெற்றது.
இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில், கடந்த நவம்பர் 29ம் திகதி தொடங்கியது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, முதல் இன்னிங்ஸில் 204 ரன்களுக்கு சுருண்டது.
வெஸ்ட் இண்டீஸ் வீரர் Permaul முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். பின்னர், முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 253 ரன்கள் எடுத்தது.
இலங்கை வீரர் ரமோஷ் மெண்டிஸ் 6 விக்கெட்டுகளை சாய்த்தார்.
இதைத்தொடர்ந்து, 2வது இன்னிங்கஸில் களமிறங்கி தடுமாறிய இலங்கை அணியை தனஞ்சய டி சில்வா தனது அற்புதமான பேட்டிங் திறமையால் மீட்டார்.
5வது நாள் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய இலங்கை அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 345 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளர் செய்தது.
தனஞ்சுய டி சில்வா இறுதிவரை ஆட்டமிழக்காமல் 155 ரன்கள் குவித்தார்.
297 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கி வெஸ்ட் இண்டீஸ் அணி, லசித் எம்புல்தெனிய, ரமோஷ் மெண்டிஸ் சுழலில் மளமளவென விக்கெட்டுகளை இழந்து 132 ரன்களுக்கு சுருண்டு 164 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையிடம் படுதோல்வியடைந்தது.
Victory by 165 runs! ?️
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) December 3, 2021
Sri Lanka seal the Sobers-Tissera Trophy 2-0! ?️
Ramesh Mendis and Lasith Embuldeniya bagged five-wickets each! ?#SLvWI pic.twitter.com/QUS80k2f73
இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றி வெஸ்ட் இண்டீஸை ஒயிட் வாஷ் செய்தது இலங்கை அணி.
C H A M P I O N S ??? #SLvWI pic.twitter.com/Bdo6zUa5Xp
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) December 3, 2021
ஆட்ட நாயகன் விருது தனஞ்சுய டி சில்வாவுக்கும், தொடர் நாயகன் விருது ரமேஷ் மெண்டிஸுக்கு வழங்கப்பட்டது.