உலகக்கோப்பையின் முதல் போட்டியில் இலங்கை த்ரில் வெற்றி! ஜாம்பவான் கூறிய வாழ்த்து
மகளிர் உலகக்கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
இலங்கை கேப்டன் மிரட்டல் ஆட்டம்
தென் ஆப்பிரிக்காவில் மகளிர் டி20 உலகக்கோப்பை நேற்று தொடங்கியது. முதல் போட்டியில் இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சை தெரிவு செய்ததால், இலங்கை முதலில் துடுப்பாடியது. தொடக்க வீராங்கனை மாதவி 8 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
அதன் பின்னர் முதல் விக்கெட்டுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்த கேப்டன் சமரி அதப்பத்து மற்றும் விஷ்மி குணரத்னே ஜோடி அதிரடியில் மிரட்டியது. குறிப்பாக பவுண்டரிகளை விளாசிய சமரி அதப்பத்து 42 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
அணியின் ஸ்கோர் 114 ஆக இருந்தபோது விஷ்மி 35 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து அடுத்த பந்திலேயே 68 ஓட்டங்களில் அவுட் ஆனார். அவர் 50 பந்துகளில் 12 பவுண்டரிகள் விளாசியிருந்தார். இலங்கை அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 129 ஓட்டங்கள் எடுத்தது.
பந்துவீச்சில் மிரட்டல்
பின்னர் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியின் விக்கெட்டுகளை இனோக ரணவீர, சுகந்தா குமாரி மற்றும் ஒஷதி ரணசிங்க கைப்பற்றினர். ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்த நிலையில் கேப்டன் சுனே லுஸ் வெற்றிக்காக போராடினார்.
இறுதியில் தென் ஆப்பிரிக்க அணி 9 விக்கெட் இழப்புக்கு 126 ஓட்டங்கள் எடுத்தது. அதிகபட்சமாக சுனே லுஸ் 28 ஓட்டங்கள் எடுத்தார். சமரி அதப்பத்துக்கு விருது இலங்கை தரப்பில் இனோக ரணவீர 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அரைசதம் அடித்த இலங்கை கேப்டன் சமரி அதப்பத்து ஆட்டத்தின் சிறந்த வீராங்கனை விருதை பெற்றார்.
முதல் போட்டியிலேயே வெற்றி பெற்ற இலங்கை அணியை ஜம்பவான் வீரர் மஹேல ஜெயவர்த்தனே ''சிறப்பாக முடித்தீர்கள் பெண்களே'' என வாழ்த்தியுள்ளார்.
Well done ladies ? pic.twitter.com/zMr6u9sAnx
— Mahela Jayawardena (@MahelaJay) February 10, 2023
உலகக்கோப்பையில் இன்று நடைபெறும் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் - இங்கிலாந்து, அவுஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
A wonderful start for the Sri Lanka skipper ?
— ICC (@ICC) February 10, 2023
Follow LIVE ?: https://t.co/B3deUDGkVu#SAvSL | #T20WorldCup | #TurnItUp pic.twitter.com/uKocb4JwrG