பாகிஸ்தானுக்கு கிளம்பிய இலங்கை மகளிர்படை!
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டுள்ளது.
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி, பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது. இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளன.
மே 24ஆம் திகதி முதல் டி20 போட்டி நடைபெற உள்ள நிலையில், சமரி அதப்பத்து தலைமையிலான இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி இன்று பாகிஸ்தானுக்கு புறப்பட்டுள்ளது.
இலங்கை அணி: சமரி அதப்பத்து (கேப்டன்), நிலக்ஷி டி சில்வா, கவிஷா தில்ஹரி, இமேஷா துலானி, அமா காஞ்சனா, அச்சினி குலசூரியா, சுகந்திகா குமாரி, ஹர்ஷிதா மாதவி, சச்சினி நிசன்சலா, உதேஷிகா ப்ரபோதணி, ஹாசினி பெரேரா, ஒஷாடி ரணசிங்கே, இனொக ரணவீரா, அனுஷ்கா சஞ்சீவனி, பிரசதனி வீரக்கொடி
டி20 தொடர் விவரம்:
- முதல் டி20 போட்டி - மே 24 (கராச்சி)
- இரண்டாவது டி20 போட்டி - மே 26 (கராச்சி)
- இறுதி டி20 போட்டி - மே 28 (கராச்சி)
ஒருநாள் போட்டி விவரம்:
- முதல் ஒருநாள் போட்டி - ஜூன் 1 (கராச்சி)
- இரண்டாவது ஒருநாள் போட்டி - ஜூன் 3 (கராச்சி)
- இறுதி ஒருநாள் போட்டி - ஜூன் 5 (கராச்சி)