பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரையும் கைப்பற்றிய இலங்கை மகளிர்படை
இலங்கை மகளிர் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டியில் வெற்றி பெற்றது.
பாகிஸ்தான் 175 ஓட்டங்கள்
பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி தம்புள்ளையில் நடந்தது.

முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 175 ஓட்டங்கள் குவித்தது. ஷாவால் ஜூல்ஃபிஹர் 48 (35) ஓட்டங்களும், முனீபா அலி 45 (30) ஓட்டங்களும், எய்மான் ஃபாத்திமா 30 (19) ஓட்டங்களும் விளாசினர்.
பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 17.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 178 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
தொடரை வென்ற இலங்கை அணி
சஞ்சனா கவிந்து 46 (24) ஓட்டங்களும், சமரி அதப்பத்து 40 (15) ஓட்டங்களும், ஹர்ஷிதா சமரவிக்ரமா 37 (22) ஓட்டங்களும் விளாசினர்.
மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றதன் மூலம் இலங்கை அணி தொடரை வென்றுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி டி20 போட்டி ஆகத்து 4ஆம் திகதி நடைபெற உள்ளது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |