இலங்கை அணி 187 ரன்கள் வித்தியாசத்தில் மிரட்டலான வெற்றி! படுதோல்வியடைந்த வெஸ்ட் இண்டீஸ்
வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 187 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கலே சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வந்தது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்சில் 386 ரன் குவித்தது. கேப்டன் கருணரத்னே அதிகபட்சமாக 147 ரன்கள் எடுத்தார்.
அடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் 3ம் நாள் ஆட்ட முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 224 ரன் எடுத்திருந்தது. நேற்று அந்த அணி 230 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
The winning moment ?#WTC23 | #SLvWI pic.twitter.com/S2Q3w4xxOJ
— ICC (@ICC) November 25, 2021
இதையடுத்து 156 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி 4 விக்கெட் இழப்புக்கு 191 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது. கருணரத்னே 83 ரன், ஏஞ்சலோ மேத்யூஸ் 69* ரன்கள் விளாசினர்.
இதைத் தொடர்ந்து, 348 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கை வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 160 ரன்களுக்கு சுருண்டது, இரண்டாவது இன்னிங்சில் இலங்கை வீரர் லசித் எம்புல்தினியா 5 விக்கெட்களை வீழ்த்தினார்.
இதையடுத்து இலங்கை அணி 187 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1 - 0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
That's a wrap! ?️
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) November 25, 2021
Sri Lanka win the 1st Test by 187 runs and take 1-0 lead in the 2-match series! ?#SLvWI pic.twitter.com/YIPDg1H5Pf