ஆசிய விளையாட்டு போட்டி; வங்கதேசத்தை வீழ்த்தி வெண்கலம் வென்ற இலங்கை
sri lanka won bronze by beat bangladesh by 63 runs in asian games: ஆசிய விளையாட்டு போட்டியில் ,வங்கதேசத்தை வீழ்த்தி இலங்கை ஆடவர் கிரிக்கெட் அணி வெண்கலம் வென்றுள்ளது.
வெண்கலம் வென்ற இலங்கை கிரிக்கெட் அணி
ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியின் ஆடவர் கிரிக்கெட் பிரிவில், வெண்கலத்திற்கான போட்டியில் இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் இன்று மோதியது.
நாணய சுழற்சியில் வென்று, முதலில் துடுப்பாட்டம் ஆடிய இலங்கை அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 165 ஓட்டங்கள் குவித்தது.

இலங்கை தரப்பில், அதிகபட்சமாக தரிந்து ரத்நாயகே 65 ஓட்டங்கள் குவித்தார்.
வங்கதேசம் தரப்பில் மஹிதி ஹசன், முஸ்தபிசுர் ரஹ்மான் மற்றும் சைப் ஹசன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
166 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி, 17.3 ஓவர்களில் 102 ஓட்டங்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.

63 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இலங்கை அணி, ஆசிய விளையாட்டு போட்டியின் ஆடவர் கிரிக்கெட் பிரிவில் வெண்கலம் வென்றுள்ளது.