இன்னிங்ஸ் மற்றும் 280 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை இமாலய வெற்றி!
காலே டெஸ்டில் இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 280 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தியது.
பாலோஆன் ஆன அயர்லாந்து
காலேவில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் பாலோஆன் ஆன அயர்லாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸை இன்று ஆடியது.
448 ஓட்டங்கள் பின் தங்கிய நிலையில் ஆடிய அயர்லாந்து, இரண்டாவது இன்னிங்ஸிலும் தடுமாறியது.
@AFP
இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர்களான பிரபத் ஜெயசூரியா மற்றும் ரமேஷ் மெண்டிஸ் கூட்டணி அயர்லாந்தை புரட்டி எடுத்தது.
@AFP
இலங்கை இன்னிங்ஸ் வெற்றி
இதனால் சொற்ப ஓட்டங்களில் அயர்லாந்து வீரர்கள் அவுட் ஆனதால், அந்த அணி 168 ஓட்டங்களுக்கு சுருண்டது. டெக்டர் 42 ஓட்டங்களும், டாக்ரெல் 32 ஓட்டங்களும் எடுத்தனர்.
@AFP
அயர்லாந்து அணி சொற்ப ஓட்டங்களில் சுருண்டதால் இன்னிங்ஸ் மற்றும் 280 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
ரமேஷ் மெண்டிஸ் 4 விக்கெட்டுகளும், பிரபத் ஜெயசூரியா 3 விக்கெட்டுகளும் விஷ்வா பெர்னாண்டோ 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
A dominant performance by Sri Lanka in the first Test ?#SLvIRE | https://t.co/9GLo0NPMGD pic.twitter.com/4j0ZOG7Bxz
— ICC (@ICC) April 18, 2023