மகுடம் சூடிய இலங்கை அணி! வாணவேடிக்கை காட்டிய வீரர்

Sri Lanka Cricket West Indies cricket team Charith Asalanka
By Sivaraj Oct 27, 2024 04:24 AM GMT
Report

இலங்கை அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

நிசங்கா 56

Pallekeleவில் இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான கடைசி ஒருநாள் போட்டி நடந்தது.

இலங்கை அணி முதலில் துடுப்பாடியது. அவிஷ்கா பெர்னாண்டோ 34 (50) ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்க, பதும் நிசங்கா அரைசதம் விளாசினார். 

அணியின் ஸ்கோர் 138 ஆக உயர்ந்தபோது, 62 பந்துகளில் ஒரு சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 56 ஓட்டங்கள் எடுத்திருந்த நிசங்கா ரன்அவுட் ஆனார்.

பார்டர் கவாஸ்கர் தொடருக்கான டெஸ்ட் அணியில் தமிழக வீரர் அறிமுகம்: யார் அவர்?

பார்டர் கவாஸ்கர் தொடருக்கான டெஸ்ட் அணியில் தமிழக வீரர் அறிமுகம்: யார் அவர்?

 

குசால் மெண்டிஸ் சரவெடி

மறுமுனையில் அதிரடியில் குசால் மெண்டிஸ் (Kusal Mendis) 22 பந்துகளில் ஒரு சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 56 ஓட்டங்கள் விளாசினார். 

இலங்கை அணி 3 விக்கெட்டுக்கு 156 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது ஆட்டம் 23 ஓவர்கள் கொண்ட போட்டியாக மாற்றப்பட்டது. 

Roston Chase, West Indies

மேலும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு DLS விதிப்படி 195 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பிரண்டன் கிங் 16 ஓட்டங்களிலும், ஷாய் ஹோப் 22 ஓட்டங்களிலும் வெளியேற, எவின் லீவிஸ் - ஷெர்பானே ரூதர்போர்டு கூட்டணி வாணவேடிக்கை காட்டியது. 

லீவிஸ் சதம்

இருவரின் ருத்ர தாண்டவ ஆட்டத்தினால் மேற்கிந்திய தீவுகள் 22 ஓவர்களில் 196 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.

எவின் லீவிஸ் (Evin Lewis) 61 பந்துகளில் 4 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 102 ஓட்டங்களும், ஷெர்பானே ரூதர்போர்டு (Sherfane Rutherford) 26 பந்துகளில் 3 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 50 ஓட்டங்களும் குவித்தனர்.

மேற்கிந்திய தீவுகள் ஆறுதல் வெற்றி பெற்ற நிலையில், இலங்கை 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது. 

ஆட்டநாயகனாக எவின் லீவிஸும், தொடர் நாயகனாக இலங்கை அணித்தலைவர் சரித் அசலங்காவும் (Charith Asalanga) தெரிவு செய்யப்பட்டனர்.    

Sri lanka vs West Indies, Odi series 2024

மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US