ஒருநாள் தொடரை வென்ற இலங்கை அணி: 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
தடுமாறிய மேற்கிந்திய தீவுகள் அணி
இலங்கை-மேற்கிந்திய தீவுகள் அணிக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்றது.
இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
Skipper Charith Asalanka is on fire ?
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) October 23, 2024
Two consecutive fifties and leading the charge against West Indies. #SLvWI pic.twitter.com/ECrGX7bPKf
இதனால் முதல் பேட்டிங்கில் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 36 ஓவர்களில் 10 விக்கெட் இழப்பிற்கு 189 ஓட்டங்கள் மட்டுமே குவித்தது.
முன்னணி வீரர்கள் அனைவரும் சொற்ப ஓட்டங்களில் வெளியேற, ஷெர்பேன் ரதர்ஃபோர்ட்(Sherfane Rutherford) மட்டும் 82 பந்துகளில் 80 ஓட்டங்கள் குவித்து போராடினார்.
மோட்டி(Motie) 61 பந்துகளில் 50 ஓட்டங்கள் குவித்து அணிக்கு மேலும் வலுசேர்த்தார்.
இலங்கை அபார வெற்றி
இதற்கிடையில் மழை குறுக்கிட்டதை தொடர்ந்து போட்டி 44 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
வெற்றி இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியில் தொடக்க வீரர் நிஷான் மதுஷ்க 44 பந்துகளில் 38 ஓட்டங்கள் குவித்தார்.
??? Sri Lanka conquer the West Indies by 5 wickets in the 2nd ODI to take an unassailable 2-0 series lead! ? #SLvWI
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) October 23, 2024
What a performance by the boys! Let's hear your cheers in the comments below! ? pic.twitter.com/EwgSv42j6c
அவரை தொடர்ந்து சரித் அசலங்கா 62 ஓட்டங்களும், சதீர சமரவிக்ரம 38 ஓட்டங்களும் குவித்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர்.
இறுதியில் 38.2 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 5 விக்கெட் இழந்து 190 ஓட்டங்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் 2 போட்டிகளை இலங்கை அணி வெற்றி பெற்று தொடரை வெற்றி பெற்றுள்ளது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |