இலங்கையின் பழம்பெரும் நடிகை காலமானார்
இலங்கையின் சிங்கள திரையுலக நடிகை மாலினி பொன்சேகா தனது 78 வயதில் காலமானார்.
மாலினி பொன்சேகா
இலங்கை திரையுலகின் ராணி என்று போற்றப்படுபவர் மாலினி பொன்சேகா. இவர் 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
குறிப்பாக, இலங்கை-இந்தியா கூட்டுத் தயாரிப்பான 'பைலட் பிரேம்நாத்' என்ற திரைப்படத்தில் சிவாஜி கணேசனுடன் இணைந்து நடித்திருந்தார். இதன்மூலம் தமிழ் ரசிகர்களிடையே பேசப்படும் நடிகைகளில் ஒருவராகவும் மாறினார்.
இந்த நிலையில், கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த 78 வயதான மாலினி பொன்சேகா காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விருதுகள்
சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் கோலோச்சிய மாலினி பொன்சேகா, ஜனாதிபதி விருதுகள் உட்பட பல விருதுகளை பெற்றுள்ளார்.
மேலும், இலங்கை நாடாளுமன்றத்தின் முன்னாள் அமைச்சராகவும் மாலினி பொன்சேகா இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |