இலங்கை போராட்டத்தில் ஆயுதத்தை கீழே போட்ட ராணுவ வீரர்! வரவேற்று வாரி அணைத்த போராட்டக்காரர்கள்
இலங்கையில் போராட்டத்தின் போது ஆயுதத்தை கீழே போட்ட ராணுவ வீரரை போராட்டக்காரர்கள் அன்போடு அணைத்துக்கொண்டனர்.
கோட்டாபயவுக்கு எதிராக பெரியளவில் போராட்டம் வெடித்துள்ள நிலையில் ஜனாதிபதி மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் புகுந்தனர்.
இதனையடுத்து கோட்டாபய அங்கிருந்து வெளியேறிவிட்டார். ஜனாதிபதி மாளிகையை போராட்டக்காரர்கள் கைப்பற்றியுள்ள நிலையில், பழைய நாடாளுமன்ற கட்டடத்தை கைப்பற்றியுள்ளனர்.
இந்தப் போராட்டத்தின் போது, காவல்துறையினர் ஏராளமானோர் போராட்டத்தில் பங்கேற்றனர். இதனைத்தொடர்ந்து சூழல் கட்டுக்குள் கொண்டு வர ராணுவம் முயற்சிகள் மேற்கொண்டது.
அப்போது திடீரென ராணுவ வீரர் ஒருவர் ஆயுதங்களை கீழே போட்டு போராட்டக்காரர்களுடன் கைகோர்த்தார். இதனைக் கண்ட போராட்டக்காரர்கள் ராணுவ வீரரை கொண்டாட்டத்துடன் வரவேற்று, வாரி அணைத்துக் கொண்டனர்.
இது தொடர்பான புகைப்படம் வெளியாகியுள்ளது.