எல்லாமே தேங்காய் தான்...31 ஆண்டுகளுக்கு முன் இந்தியா சென்ற இலங்கை அகதி பெண்ணின் சமையல் ரகசியம்!
இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு ஆண் மற்றும் பெண் என பலர் அகதிகளாக குடிபெயர்ந்துள்ளனர்.
அப்படி இலங்கையின் மன்னாரைச் சேர்ந்த 39 வயது மதிக்கத்தக்க Basilica, என்ற பெண் கடந்த 1990-ஆம் ஆண்டு இந்தியாவிற்கு சென்றுள்ளார்.
இந்தியாவிற்கு சென்ற அவருக்கு தன்னுடைய வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது தெரியாது. ஆனால், 31 ஆண்டுகளுக்கு பின், தற்போது சென்னை வாசிகளுக்கு ஒரு உண்மையான இலங்கை உணவுகளை கொடுத்து வருகிறார் என்றால் நம்ப முடிகிறதா?
பாதிக்கப்படும் பெண்களை மேம்படுத்துவதற்காக திரைப்பட தயாரிப்பாளரும், சமூக ஆர்வலருமான Poongkothai Chandrahasan-னால் நிறுவப்பட்ட சமூக நிறுவனமான Serendip Boutique நடத்தும், பாப் அப் கிளவுட் சமயலறையில்(யாழ்பாணம்) இலங்கை அகதி பெண்களால் உணவு சமைக்கப்பட்டு கொடுக்கப்படுகிறது.
இந்த, இலங்கை உணவு வகைகளின் சிறப்பு, சமையல் பாணி மற்றும் கிளவுட் சமையலறை பற்றி பிரபல ஆங்கில ஊடகமான டிடி நெக்ஸ்ட் Basilica மற்றும் Poongkothai Chandrahasan-ஐ பேட்டி எடுத்துள்ளது.
அப்போது, Basilica கூறுகையில், இங்கு பெரும்பாலான உணவுகளில் தேங்காய் எண்ணெய் மற்றும் தேங்காய் பால் தான் பயன்படுத்துகிறோம்.
இலங்கையின் பிராந்தியங்களுக்கு ஏற்ப உணவுகள் தயாரிக்கும் போது பொருட்கள் வேறுபடும். ஏனெனில் சிங்கள மாகாணங்கள் மற்றும் தமிழ் மாகாணங்களில் சமையல் பாணியில் சிறிய வேறுபாடுகள் உள்ளது.
ஒவ்வொரு மாகாணத்திலும் வெவ்வேறு சிறப்புகள் உள்ளன. தன்னுடைய மாகாணமாக மன்னாரில் வழக்கமான காலை உணவு பழைய சோறு மற்றும் அதற்கு எதாவது தொட்டுக் கொள்வது போல் இருக்கும்.
இதை தவிர்த்து சிவப்பு அரிசி புட்டு மற்றும் இடியாப்பமும் காலை உணவில் இருக்கும்.
மதிய உணவில் பெரும்பாலும் சாதம், மீன் குழம்பு மற்றும் காய்களை உள்ளடக்கியதாக இருக்கும்.
நாங்கள் மீன் வாங்கும்போது, அதனுடன் மூன்று வகையான உணவுகளைச் செய்வோம். அதாவது மீன் சோதி, மீன் குழம்பு மற்றும் மீன் பொரியல். மீன் சோதி என்பது மிதமான மசாலா அந்த மீன் சோதியில் இருக்கும்.
இங்கு தேங்காய் பால் சேர்த்து மீன் குழும்பு வைக்கப்படும். இரவு உணவு பெரும்பாலும் ரொட்டி தான் இருக்கும். அதிலே தேங்காய் ரொட்டி, மைதா மற்றும் தேங்காய் கொண்டு செய்யப்படுவது பழக்கம்.
உலகில் இருக்கும் பல சமையல் முறைகளைப் போன்றே, இலங்கை சமையலுக்கு என்று ஒரு தனி வித்தியாசம் இருக்கும். நாங்கள் எப்போதும் புதிதாக தயாரிக்கப்பட்ட மசாலாப் பொருட்களை சமையலுக்குப் பயன்படுத்துகிறோம்.
வெந்தயம் விதைகள் இலங்கை தயாரிப்பின் மசாலாவில் சேர்க்கப்படும் மிக முக்கிய பொருள் ஆகும். இலங்கை தமிழ் மாகாணத்தில் மிகவும் பிரபலமான உணவுகளில் யாழ்பாணம் உண்டு.
இங்கு கடல் உணவுகள் மற்றும் காரமான கடல் சார்ந்த சூப் தனி சுவையை கொடுக்கும் என்று கூறினார்.
இனிப்பு பற்றி கேட்ட போது, Poongkothai Chandrahasan அதற்கு உடனடியாக பதில் அளித்தார். அவர், எங்களிடம் லாவெரியா என்ற இனிப்பு உள்ளது. இது ஒரு பிரபலமான சிங்கள இனிப்பு ஆகும்.
இலங்கையர்கள் பால் டோபி தயாரிக்கிறார்கள், இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானது.
இந்த கிளவுட் சமையலறை(யாழ்பாணம்) தொடங்கப்பட்டதைப் பற்றி அவர் கூறுகையில், தொற்றுநோய் காரணமாக, பல தமிழ் அகதிகள் பெண்கள் மற்றும் அவர்களின் கணவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர். பணத்தை எவ்வாறு திரட்டுவது என்று நாங்கள் விவாதித்தபோது, கிளவுட் சமையலறை பற்றிய யோசனை தோன்றியது.
அதுவே இதற்கு முக்கிய காரணம் என்று கூறியுள்ளார்.