தனது முதல் சர்வதேச போட்டியில் களமிறங்கும் இலங்கை வீரர்: உற்சாகமாக வரவேற்ற வீரர்கள்
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இன்றைய போட்டியில் அறிமுகமான துனித் வெல்லலேஜுக்கு இலங்கை வீரர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இலங்கை-அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று பல்லேகேலேவில் நடக்கிறது.
இந்த போட்டியில் துனித் வெல்லலேஜ் என்ற 19 வயது பந்துவீச்சாளர் விளையாடுகிறார். அவருக்கு இதுதான் முதல் சர்வதேச போட்டியாகும்.
எனவே அவரை உற்சாகமாக வரவேற்ற இலங்கை வீரர்கள், தொப்பி அணிவித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இடக்கை பந்துவீச்சாளரான துனித் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடியவர்.
இந்த நிலையில் இன்றைய போட்டியில் அனுபவ வீரர்களான சமீரா, கருணாரத்னே ஆகியோருடன் இணைந்து துனித் பந்துவீச உள்ளார்.
ICC U19 Men's @cricketworldcup 2022 star Dunith Wellalage is making his ODI debut for Sri Lanka ?
— ICC (@ICC) June 14, 2022
Watch the #SLvAUS series on https://t.co/CPDKNxoJ9v (in select regions) ?
? @OfficialSLC pic.twitter.com/1uqVQlsYgk