10 கிலோ எடையுடைய கட்டியை அகற்றிய இலங்கை வைத்தியர்கள்
இலங்கையில் ஹம்பாந்தோட்டை பொாது வைத்தியசாலையில் பெண்ணெருவரின் வயிற்றில் இருந்து சுமார் 10 கிலோ எடைக்கொண்ட கட்டி ஒன்றை சத்திரசிகிச்சை மூலம் வெளிக்கொண்டு வந்துள்ளனர்.
பொது வைத்தியசாலையின் மகப்பேறு வைத்திய நிபுணர் வைத்தியர் சமந்த சமரவிக்ரம தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட சத்திரசிகிச்சையில் கருப்பை வாயில் இருந்து இந்த கட்டியை அகற்றியுள்ளனர்.
நோயாளியின் உடல்நிலை
கடந்த வியாழக்கிழமை 49 வயதுடைய இந்த பெண்மணி சுவாசப்பிரச்சினை காரணமாக வைத்தியசாலைக்கு வந்ததாகவும், ஸ்கேன் பரிசோதனையில் கட்டி இருப்தை கண்டுப்பிடித்ததாகவும் வைத்தியர்கள் கூறியுள்ளார்கள்.
இதனை தொடர்ந்து குறித்த பெண் உடனடியாக ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு (19.06.2023) ஆம் திகதி சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சத்திரசிகிச்சையினை தொடர்ந்து நோயாளி நலமுடன் இருப்பதாக விசேட வைத்தியர் சமந்த சமரவிக்ரம தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |