நன்றி அவுஸ்திரேலியா.. வீரர்களை நெகிழவைத்த இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள்!
தங்கள் நாட்டிற்கு வருகை தந்த அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு இலங்கை ரசிகர்கள் அரங்கத்திலேயே நன்றி தெரிவித்தனர்.
இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான ஐந்தாவது ஒருநாள் போட்டி கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் நேற்று (ஜூன் 24) நிறைவடைந்த பின், இலங்கை கிரிக்கெட் அணி ரசிகர்கள் தங்கள் நாட்டிற்கு பயணித்த அவுஸ்திரேலிய அணிக்கு நன்றி தெரிவித்தனர்.
'நன்றி ஆஸ்திரேலியா' என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் ரசிகர்கள் தங்கள் நன்றியை வெளிப்படுத்தினர்.
PC: Buddhika Weerasinghe / Getty Images
இலங்கை தற்போது பாரிய பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றது, ஆனால் அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையில் நடைபெற்ற இந்த போட்டி, கிரிக்கெட் விளையாட்டை கொண்டாடும்ம் இலங்கை மக்களின் முகங்களில் சிறிது புன்னகையை வரவழைத்துள்ளது.
நடப்பு உலக டி20 சாம்பியனுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20ஐ தொடரை இழந்த பிறகு, இலங்கை மீண்டும் ஸ்டைலாக எழுச்சி பெற்று ஐந்து போட்டிகளைக் கொண்ட தொடரில் 3-2 என்ற வித்தியாசத்தில் வென்றது.
"We're generally the enemy" ?
— cricket.com.au (@cricketcomau) June 24, 2022
The scenes in Colombo after the fifth ODI were unreal and left Glenn Maxwell and the Aussies stunned as fans thanked them for touring ? #SLvAUS pic.twitter.com/Xugt5KVmyX
வெள்ளியன்று (ஜூன் 24) கொழும்பில் நடந்த வெள்ளைப் பந்து போட்டியின் முடிவில், ஏராளமாக திரண்டிருந்த இலங்கை ரசிகர்கள், அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு பிரமாண்டமான வரவேற்பு அளித்தனர்.
ஆர் பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியர்கள் வெற்றி பெற்ற போதிலும், உள்ளூர் மக்கள் தங்கள் நன்றியை வெளிப்படுத்தினர்.
இலங்கை மக்களின் ஆரவாரத்தைப் பார்த்து அவுஸ்திரேலிய அணி வீரர்களும் நெகிழ்ச்சியடைந்தனர்.
Outstanding scenes at the Premadasa as the Australian team takes a lap of honour thanking the Premadasa crowd as they chant “Thank You Australia” #SLvAus pic.twitter.com/zyN1xzsLsb
— Bharat Sundaresan (@beastieboy07) June 24, 2022