இலங்கை வடக்கு மாகாணத்தில் 2 செயலாளர்கள் பதவி மாற்றம்: ஆளுநர் திட்டம்
இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள இரண்டு அதிகாரிகளி பதவிகளை மாற்ற ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் திட்டமிட்டுள்ளார்.
ஆளுநர் முடிவு
இலங்கையின் வடக்கு மாகாணத்தில் எந்தவொரு ஊழலிலும் சிக்காத நேர்மையான அதிகாரிகளை அவர்களது பதவிகளில் இருந்து நீக்கி குறைவான கீழ் நிலைப் பதவிகளில் மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் வாகீசன் மற்றும் துணைப் பிரதம செயலாளர் குகநாதன் ஆகியோரின் பதவிகளை மாற்றுவதற்கு வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் திட்டமிட்டுள்ளார்.
அதிகாரிகள் இடமாற்றம்
மேலும் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் வாகீசன் மகளிர் விவகார அமைச்சுக்கும், மகளிர் விவகார செயலாளராக இருந்த ரூபினி வரதலிங்கத்தை துணைப் பிரதம செயலாளர் பதவிக்கும் மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் துணைப் பிரதம செயலாளர் குகநாதன் உள்ளூராட்சி அமைச்சுக்கும் மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த முறை வடக்கு மாகாண ஆளுநராக பி.எஸ்.எம்.சாள்ஸ் இருந்த போது மன்னாரில் அரச காணிகள் பகிர்ந்தளிப்பதில் தனக்கு சார்பாக நடந்து கொள்ளவில்லை என்பதற்காக மாகாண ஆணையாளர் பதவியில் இருந்து குகநாதனை மாற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |