இந்திய உளவு அமைப்பால் இலங்கைக்கு எந்த எச்சரிக்கையும் வழங்கப்படவில்லை: அமைச்சர் விளக்கம்
இலங்கையில் இனக்கலவரம் ஏற்படும் என்று இந்திய உளவு அமைப்பால் எச்சரிக்கை வழங்கப்பட்டு இருப்பதாக வெளியான கருத்தை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
இலங்கையில் கலவரம்
இலங்கையில் இனக்கலவரம் ஒன்று ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக இலங்கையின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோனுக்கு இந்திய உளவு பிரிவு தகவல் வழங்க இருப்பதாக வெளியாகியுள்ள கருத்தை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
இது தொடர்பாக இலங்கை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் மேலும் தெரிவிக்கையில், எதிர்கட்சி தலைவரும் சில சமூக ஊடகங்களிலும் இலங்கையில் இனக்கலவரம் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக வெளிநாட்டு உளவு பிரிவு தன்னை எச்சரித்து இருப்பதாக தகவல்கள் தெரிவித்து வருகின்றனர்.
நான் இது தொடர்பாக முதலில் ஒன்றை கூறிக் கொள்ள விரும்புகிறேன், எனக்கு எந்தவொரு உளவுப் பிரிவும் நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பாகவும் இலங்கையில் இனக்கலவரம் ஏற்படுவது தொடர்பாகவும் எந்தவொரு தகவலும் வழங்கவில்லை.
இதை நான் மிகவும் பொறுப்பு கூறிக் கொள்ள விரும்புகிறேன், அதே சமயம் சமூக ஊடகங்களில் தெரிவிக்கப்படும் அல்லது பரப்படும் தகவல்களுக்கு தன்னால் ஒவ்வொரு முறையும் விளக்கம் கூறிக் கொண்டு இருக்க முடியாது.
இலங்கையில் சில இடங்களில் அரசியல் தூண்டல் காரணமாக இனக்கலவரத்தை உருவாக்க சில குழுக்கள் முயற்சி செய்து வருகின்றனர் என்பதை இலங்கை உளவு பிரிவால் ஊகிக்க முடிகிறது.
இந்த குழுக்கள் மீது இலங்கை அரசும், பாதுகாப்பு துறையும் சிறப்பு கவனம் செலுத்தி உள்ளது என்பதை மட்டும் நான் இங்கு நினைவூட்ட விரும்புகிறேன் என அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |