அமெரிக்காவில் இலங்கையர் ஒருவர் ரயில் விபத்தில் மரணம்
அமெரிக்காவின் விக்டோரியா மாகாணத்தில் கார் மீது ரயில் மோதியதில் இலங்கையர் ஒருவர் பலியானார்.
அவருடன் காரில் இருந்த மற்றோரு இலங்கையர் உயிர் தப்பினார்.
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள Edna நகரத்தில் வசித்து வந்த இலங்கையரான 45 வயது நாலக மனோஜ் சில்வா கவிரத்னா (Nalaka Manoj Silva Kavirathna), மற்றும் ஒரு இலங்கை நபர் சென்ற கார் மீது ரயில் மோதி விபத்துக்குதானது.
இந்த சம்பவம் விக்டோரியா மாகாணத்தின் Inez நகத்தில், உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை அதிகாலை 12.20 மணியளவில் நடந்ததாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இலங்கையை பூர்வீகமாக கொண்ட இருவரும், 2013 Nissan Versa காரில் வடகிழக்கு திசையில் Farm-to-Market Road 444 சாலையில் சென்றுகொண்டிருந்தனர். கவிரத்னா வாகனைத்தி ஓட்டினார்.
அந்த கார் திடீரென ரயில் தண்டவாளத்தை கடக்கும் நேரத்தில் நடுவில் நின்றுள்ளது. அந்நேரம் பார்த்து தண்டவாளத்தில் ரயில் வேகமாக வந்து ஓட்டுநர் பக்கத்தில் மோதியது.
Representative image
மோதிய பேகத்தில் கார் தூக்கி வீசப்பட்டு அருகில் ஒரு பள்ளத்தில் விழுந்தது. இந்த விபத்தில் நாலக மனோஜ் சில்வா கவிரத்னா சம்பவ இடத்திலேயே 12:27 மணியளவில் உயிரிழந்ததாக்க பொலிஸார் தெரிவித்தனர்.
மற்றோரு இலங்கையர் காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவர் யார், ஆணா பெண்ணா என்ற எந்த தகவலும் வெளியாகவில்லை.
கவிரத்னாவுக்கு அமெரிக்காவில் உறவினர்கள் யாரும் இல்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தை சுத்தம் செய்ய நான்கு மணி நேரம் ஆனது. விபத்து குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.