குடும்பம் இலங்கையில்... கனடாவில் தனிமையில் வாடிய இலங்கையர்: மீளாத்துயரத்தில் ஆழ்த்திவிட்ட சம்பவம்
கனடாவில் வாழ்ந்துவந்த இலங்கையர் ஒருவர், தனது குடும்பம் முழுவதையும் வன்முறைக்கு இழந்து தவிக்கும் நிலையில், அவரை மீளாத்துயரத்தில் ஆழ்த்திவிட்ட அந்த பயங்கர சம்பவம் குறித்த சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
கனடாவில் தனிமையில் வாடிய இலங்கையர்
இலங்கையிலிருந்து கனடாவுக்கு வந்து பல ஆண்டுகள் தனிமையாகத்தான் வாழ்ந்துவந்துள்ளார் தனுஷ்க விக்கிரமசிங்க. கடந்த கோடையில்தான் தனுஷ்கவின் மனைவியான தர்ஷனி பன்பரநாயக்க ஹமா வல்வே தர்ஷனி டிலந்திகா ஏகநாயக (35) தம்பதியரின் பிள்ளைகளான இனுக விக்ரமசிங்க (7), அஷ்வினி விக்கிரமசிங்க (4), ரினியானா விக்ரமசிங்க (2) ஆகியோர் கனடா வந்தடைந்துள்ளார்கள்.
சில மாதங்களுக்கு முன் மகள் கெல்லி விக்கிரமசிங்க பிறக்க, குடும்பம் மகிழ்ச்சியில் திளைத்துள்ளது.
உதவியால் வந்த வினை
கனடாவில் கல்வி கற்க வந்த இலங்கையரான ஃபெப்ரியோ டி ஸோய்சா (19) என்பவர் தனக்கு தங்க இடம் இல்லை என்று கூறியபோது, அவரை தன் வீட்டு அடித்தளத்தில் தங்கிக்கொள்ளச் சொல்லியிருக்கிறார் தனுஷ்க.
கடந்த புதன்கிழமை இரவு 11.00 மணியளவில் பணி முடித்து தனுஷ்க வீடு திரும்பும்போது வீடு அமைதியாக இருந்திருக்கிறது. ஏன் வீடு அமைதியாக இருக்கிறது என எண்ணியவாறே வீட்டுக்குள் நுழைந்த தனுஷ்கவை மார்பிலும் முதுகிலும் கத்தியால் குத்தியுள்ளார் டி ஸோய்சா.
காரணம் புரியாமல் திகைத்த தனுஷ்க, டி ஸோய்சாவைத் தடுக்க முயன்றதில் அவரது விரல்கள் கடுமையாக சேதமடைந்ததுடன், அவரது முகத்திலும் வெட்டு விழுந்திருக்கிறது.
Katie Griffin/CTV News Ottawa
அந்த நிலைமையிலும், எனது மனைவி பிள்ளைகளுக்கு ஏதாவது ஆபத்தா என தனுஷ்க கேட்க, இல்லை என பொய் சொல்லியிருக்கிறார் டி ஸோய்சா.
சற்று நேரத்தில் பொலிசார் வந்து டி ஸோய்சாவைக் கைது செய்ய, வீட்டுக்குள் சென்ற தனுஷ்க, தன் மனைவி, தன் நான்கு பிள்ளைகள் மற்றும் டி ஸோய்சாவைப் போலவே தன் வீட்டில் தங்கியிருந்த அமரகூன்முபியயான்சேல ஜீ காமினி அமரகோன் (40) ஆகிய ஆறு பேரும் இரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு அதிர்ந்துபோயிருக்கிறார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனுஷ்க, இன்னமும் அந்த அதிர்ச்சியிலிருந்து விடுபடவில்லை.
அஞ்சலி செலுத்த திரண்ட மக்கள்
இந்நிலையில், சனிக்கிழமை இரவு 11.00 மணியளவில், இந்த துயர சம்பவம் நிகழ்ந்த Barrhaven பகுதியிலுள்ள நூற்றுக்கணக்கான மக்கள், நண்பர்கள் முதலானோர் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி நிகழ்ச்சி ஒன்றிற்காக கூடியுள்ளார்கள்.
அவர்களில், ஒட்டாவா மேயரான Mark Sutcliffe, பொலிஸ் துறைத் தலைவரான Eric Stubbs மற்றும் கனடாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகரான Anzul Banu Jhanஆகியோரும் அடங்குவர்.
அஞ்சலி செலுத்த கூடிய மக்களில் சிலர், கண்ணீர் மல்க, தனுஷ்க குடும்பம் தொடர்பில் தங்கள் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |