தென்ஆப்பிரிக்காவை விரட்டியடித்த இலங்கை ஜாம்பவான்கள் கிரிக்கெட் அணி! இறுதிப்போட்டியில் யாருடன் மோதுகிறது தெரியுமா?
சாலை பாதுகாப்பு கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் இந்திய ஜாம்பவான்கள் அணியுடன் இலங்கை ஜாம்பவான்கள் அணி மோதுகிறது.
இத்தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான்கள் அணியை தோற்கடித்த இந்திய ஜாம்பவான்கள் அணி இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது.
இந்நிலையில், 2 ஆவது அரையிறுதியில் இலங்கை ஜாம்பவான்கள் அணியும் தென்னாபிரிக்க ஜாம்பவான்கள் அணியும் பலப் பரீட்சை நடத்தின.
முதலில் களமிறங்கிய தென்னாபிரிக்க அணி இலங்கை அணியின் பந்துவீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடியாது சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது
#SLLvsSAL
— Road Safety World Series (@RSWorldSeries) March 19, 2021
A 5️⃣ 0️⃣ for Van Wyk.
An important innings by the big man.
Watch LIVE only on @Colors_Cineplex, #RishteyCineplex and for free on @justvoot. #UnacademyRoadSafetyWorldSeries pic.twitter.com/MeH7ZWIotS
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 125 ரன்களில் சுருண்டது.
பந்து வீச்சில் இலங்கை ஜாம்பவான்கள் அணி சார்பில் நுவான் குலசேகர சிறப்பாக பந்து வீசி 25 ரன்களை கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து 20 ஓவர்களில் 126 ரன்களை பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 17.2 ஓவர்கள் நிறைவில் வெற்றி இலக்கை அடைந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி கொண்டு இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
#SLLvsSAL
— Road Safety World Series (@RSWorldSeries) March 19, 2021
We are still in awe of this phenomenal running catch by Chamara Silva. ?
Watch LIVE only on @Colors_Cineplex, #RishteyCineplex and for free on @justvoot. #UnacademyRoadSafetyWorldSeries pic.twitter.com/j8ZRGKRFPW
இலங்கை அணி சார்பில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய ஜெயசிங்க ஆட்டமிழக்காது 47 ரன்களை பெற்றுக்கொடுத்தார். மறுமுனையில் தரங்க ஆட்டமிழக்காது 39 ரன்களை எடுத்தார்.
இதை தொடர்ந்து வரும் 21 ஆம் திகதி இந்திய ஜாம்பவான்கள் அணியை இலங்கை அணி இறுதிப் போட்டியில் சந்திக்கவுள்ளது.
வெகுகாலம் கழித்து இரு அணிகளும் இறுதி போட்டியில் மோதவுள்ளது ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
#SLLvsSAL
— Road Safety World Series (@RSWorldSeries) March 19, 2021
With perfect precision from day one, the #SriLankaLegends have earned their spot in the finals! ? A big cheer for the #SouthAfricaLegends, thank you for the sublime performances!
Watch LIVE only on @Colors_Cineplex, #RishteyCineplex and for free on @justvoot. pic.twitter.com/0y7Aco6zt2