Impact வீரராக வந்து அதிர்ச்சி கொடுத்த இலங்கை வீரர்: சிக்ஸர்களை தெறிக்கவிட்ட தோனி..மிரட்டல் வெற்றி

MS Dhoni Chennai Super Kings Delhi Capitals
By Sivaraj May 10, 2023 05:49 PM GMT
Report

டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் பதிரனா, Impact வீரராக களமிறங்கி விக்கெட் வீழ்த்தி மிரட்டினார்.

தடுமாறிய தொடக்கம்

நாணய சுழற்சியில் வென்ற CSK அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்து விளையாடியது. கான்வே 10 ஓட்டங்களில் அக்சர் படேல் பந்துவீச்சில் அவர் ஆனார்.

அதன் பின்னர் வந்த ரஹானே 21 ஓட்டங்களும், கெய்ட்வாட் 24 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். மொயீன் அலி 7 ஓட்டங்களில் வெளியேறினார்.

சிக்ஸர்களை பறக்கவிட்ட தோனி

பின்னர் களமிறங்கிய தூபே (25), ஜடேஜா (21), ராயுடு (23) அதிரடியாக ஓட்டங்கள் குவித்தனர். கேப்டன் தோனி 9 பந்துகளில் 2 சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 20 ஓட்டங்கள் விளாசினார்.

இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் 8 விக்கெட் இழப்புக்கு 167 ஓட்டங்கள் எடுத்தது. மிட்செல் மார்ஷ் 3 விக்கெட்டுகளும், அக்சர் படேல் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

அதன் பின்னர் களமிறங்கிய டெல்லி அணி விக்கெட்டுகளை பறிகொடுத்தது. தீபக் சஹர் பந்துவீச்சில் வார்னர் ஓட்டங்கள் எடுக்காமலும், சால்ட் 17 ஓட்டங்களிலும் வெளியேறினர்.

இலங்கை வீரரின் மிரட்டல் பந்துவீச்சு

மார்ஷ் 5 ஓட்டங்களில் ரன்அவுட் ஆனார். அதன் பின்னர் ரோசோவ் , மனீஷ் பாண்டே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அப்போது சென்னை அணியில் Impact வீரராக களமிறங்கிய இலங்கையின் பதிரனா மிரட்டலான பந்துவீச்சில் மனீஷ் பாண்டேவை அவுட் செய்து டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

டெல்லி அணிக்கு ஓரளவு நம்பிக்கை கொடுத்த ரோசோவ் 35 ஓட்டங்களில் ஜடேஜா பந்துவீச்சில் அவுட் ஆனார். அக்சர் படேல் அதிரடியாக 12 பந்துகளில் 21 ஓட்டங்கள் எடுத்த நிலையில், பதிரனா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

ரோசோவ்/Rossouw @IPL (Twitter)

சென்னை வெற்றி

கடைசி ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரிகள் விளாசிய லலித் யாதவை 12 ஓட்டங்களில் பதிரனா போல்டாக்கினார். இறுதியில் டெல்லி அணி 140 ஓட்டங்கள் மட்டுமே எடுத்ததால், சென்னை சூப்பர் கிங்ஸ் 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

பதிரனா 3 விக்கெட்டுகளும், தீபக் சஹர் 2 விக்கெட்டுகளும், ஜடேஜா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி அடுத்த சுற்றினை ஏறக்குறைய உறுதி செய்து விட்டது.   

Impact வீரராக வந்து அதிர்ச்சி கொடுத்த இலங்கை வீரர்: சிக்ஸர்களை தெறிக்கவிட்ட தோனி..மிரட்டல் வெற்றி | Sri Lankan Pathirana 2 Wkts Vs Dc Ipl 2023 @IPL (Twitter)

நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US