இலங்கை வரலாற்றின் முக்கியமான நாள்! பட்டாசு வெடித்து தங்களது மகிழ்ச்சியை கொண்டாடும் இலங்கை மக்கள்
இன்று இலங்கை வரலாற்றின் முக்கியமான நாளாக கருதப்படுகின்றது. கடந்த 3 மாதமாக கொழும்பில் பல இடங்களில் ஜனாதிபதி கேட்டாபயவுக்கு எதிராாக போராட்டங்கள் நமைபெற்று கொண்டு வருகின்றது.
இந்நிலையில் கொழும்பு மற்றும் நாட்டின் பல பாகங்களில் இன்று நடத்தப்பட்டு வரும் போராட்டங்கள் வரலாற்று சம்பவங்களாக பதிவாகி வருகின்றன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இல்லம் மற்றும் ஜனாதிபதி செயலகம் போன்று முற்றுமுழுதாக போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
ஜனாதிபதி செயலகம் மற்றும் வீட்டுக்குள் உள்நுழைந்த போராட்டக்காரர்கள் அங்கிருக்கும் காட்சிகளை வீடியோக்களாக பதிவு செய்து சமூகவலைத்தளங்களில் உடனுக்குடன் பதிவு செய்து கொண்டு வருகின்றனர்.
இதனை பார்த்த நாட்டு மக்கள் பலரும் உற்சாகத்தில் துள்ளி குதித்து வருகின்றனர்.
மேலும் இதனை நாட்டு மக்கள் பல இடங்களில் மகிழ்ச்சியை தெரிவிக்கும் வகையில் பட்டாசு வெடிக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது.
இந்த நாள் இலங்கை வரலாற்றில் முக்கிமானதொரு நாளாக கருதப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.