மொடலாகும் ஆசையில் நாடிய பெண்களை... லண்டனில் இலங்கையருக்கு நீதிமன்றம் விதித்த தண்டனை
லண்டனில், மொடலாகும் ஆசையில் தம்மை நாடிய பெண்களை தமது ஆசைக்கு இரையாக்கிய இலங்கையரான புகைப்படக் கலைஞருக்கு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளது.
வெளிப்படையாக பொலிசாரிடம்
வெளிநாட்டு பெண் ஒருவர், தமக்கு நேர்ந்த கொடுமையை வெளிப்படையாக பொலிசாரிடம் புகாரளிக்க, தற்போது அந்த நபருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
@mylondon
இலங்கையரான ஸ்ரீதரன் சயந்தன்(42). பாதிக்கப்பட்ட அந்த வெளிநாட்டு பெண்மணியை 2022 மே மாதம் தொழில்முறையாக சந்தித்துள்ளார். 30 வயது கடந்த அந்த பெண்மணி மொடலாகும் ஆசையில் சயந்தனின் உதவியை நாடியுள்ளதாக கூறப்படுகிறது.
புகைப்படங்கள் பதிவு செய்வதற்காக, சயந்தன் கூறிய கட்டணத்தையும் செலுத்தியுள்ளார். அதன் பின்னர் சயந்தனின் அழைப்பை ஏற்று ஜூலை 8ம் திகதி Warren தெருவில் அமைந்துள்ள ஒரு மதுபான விடுதியில் மதியத்திற்கு மேல் சுமார் 7.40 மணியளவில் சந்தித்துள்ளனர்.
ஸ்டூடியோவுக்கு அழைத்து சென்று
இதுவும் மொடல் துறையில் ஒரு பகுதி என்றே அந்த பெண்மணியும் நம்பியுள்ளார். ஆனால் அவரை கட்டாயப்படுத்தி அதிக மது அருந்த வைத்துள்ளார் சயந்தன். இதனையடுத்து போதையில் தள்ளாடிய குறித்த பெண்ணை தமது ஸ்டூடியோவுக்கு அழைத்து சென்றுள்ளார்.
அதிக போதையில் இருந்த அவரை சயந்தன் சீரழித்துள்ளார். மட்டுமின்றி, போதையில் இருந்து விடுபட்ட பின்னர் சயந்தனே, அவரை ரயில் நிலையம் வரையில் சென்று வழியனுப்பியும் வைத்துள்ளார்.
போதையில் இருந்ததால் தமக்கு நேர்ந்ததை எதிர்க்கவும் தடுக்கவும் முடியாமல் போனதாக கூறும் அந்த சீன நாட்டவர், இறுதியில் ஜூலை 31ம் திகதி பொலிசாரை நாடி புகாரளித்துள்ளார்.
பிரித்தானியாவில் இதுபோன்ற வழக்குகள் எவ்வாறு விசாரிப்பார்கள் என்பது தெரியாத காரணத்தால் தாமதமானதாகவும் விளக்கமளித்துள்ளார். இந்த புகாரை அடுத்து விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள், சயந்தனுக்கு எதிராக வழக்கு பதிந்துள்ளனர்.
2012 மற்றும் 2015லும் இதுபோன்ற சம்பவம்
கண்காணிப்பு கமெராவில் பதிவான காட்சிகளையும் ஆதாரமாக எடுத்துக்கொண்டுள்ளனர். அத்துடன் அவரது ஸ்டூடியோ ஊழியர்களிடம் இருந்து வாக்குமூலம் பெற்றுக்கொண்ட பொலிசார், சயந்தனை கைது செய்துள்ளனர்.
@mylondon
மேலும், 2012 மற்றும் 2015லும் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது வெளிச்சத்துக்கு வந்தது. ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் இதுவரை பொலிசாரை நாடவில்லை என்றே கூறப்படுகிறது.
தற்போது சயந்தன் தொடர்பில், பாதிக்கப்பட்ட பெண்கள், அல்லது இந்த வழக்கில் மேலதிக தகவல் தெரிவிக்க விரும்பும் பொதுமக்கள் பொலிசாரை நாட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |